போலிச் செய்திகள் மூலம் மோசடி முயற்சி – பொலிஸ் எச்சரிக்கை.
நாட்டில் வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில்...
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களம், சமீபத்தில் பரவி வரும் போலிச் செய்திகள் தனிநபரின் தகவல்களை திருடவும், மொபைல் மென்பொருளை மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்படுவதாக எச்சரித்துள்ளது.
இது குறித்து கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். வங்கிச் சேவைகள் உள்ளிட்ட செயல்களுக்கு கைப்பேசிகளை பயன்படுத்தும்வர்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.