LATEST
கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!
உள்ளூர்

பொகவந்தலாவயில் அனுமதியின்றி இயங்கிய மதுபானசாலைக்கு சீல் வைப்பு

September 8, 2025 · Tamil Ceylon LK

பொகவந்தலாவ டின்சின் பகுதியில் சட்ட அனுமதியின்றி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததன் காரணமாக, கண்டி விசேட கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலைக்கு சென்ற மேற்படி கலால் திணைக்கள அதிகாரிகள் ஒரு மதுபான போத்தலும், ஒரு பியர் போத்தலும் கொள்வனவு செய்த போது இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தமையை கண்டறிந்துள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் குறித்த மதுபானசாலைக்கு சீல் வைத்தனர்.

இதன்போது இதற்கான தண்டப்பணத்தை செலுத்தும் வரை குறித்த மதுபானசாலையினை மீண்டும் திறக்க முடியாது எனவும், கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி மற்றும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›