காணாமல் போயிருந்த கோவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவு கண்டுபிடித்து மீள இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரையான மொத்த கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 5350 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 27ம் திகதி விடுபட்ட தரவுகள் இவ்வாறு தேசிய சுகாதார பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 431,519 ஆகவும் தற்போது சிகிச்சைப் பெற்று வரும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 65,146ஆகவும் உயர்வடைந்துள்ளது.