மாத்தறை மாவட்ட மேலதிக நீதவான் பணிநீக்கம்
மாத்தறை மாவட்ட மேலதிக நீதவான், நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவால்
Published September 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மாத்தறை மாவட்ட மேலதிக நீதவான், நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மதுகம நீதவான் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதுடன், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், புதிய நியமனம் செய்யப்படும் வரை மதுகம நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் பதில் நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.