மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பு - தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில்
மட்டக்களப்பு – தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த கோடா பரலுடன் சந்தேகநபரை ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய, குறித்த பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை இன்று முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பொலிஸார் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது 180,000 மில்லி லீட்டர் ஒரு பரலுடன், 20 வயதுடைய பன்சேனை உன்னிச்சை பகுதியை சேர்ந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து கிடைத்த தகவலுக்கமைய, மேலதிக சுற்றிவளைப்பின் போது சுமார் (10) கோடா பரல்கள், 12 வெற்று பரல்கள் கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபருடைய சான்றுப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.