வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை இன்று முதல் நீடிப்பு

0

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்படமாட்டதெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.