மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

2026 தமிழ் நாட்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு...

Published September 9, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

2026 தமிழ் நாட்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் மிக முக்கிய கட்டமான மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜயின் இவ் நடவடிக்கை, அவரது அரசியல் பிரவேசத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகின்றது.

அண்மையில் மதுரையில் இடம்பெற்ற கட்சியின் இரண்டாவது பிரம்மாண்ட மாநில மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் “விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று விஜய் உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே, செப்டம்பர் 13, 2025 முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அரசு மற்றும் உள்ளூர் அமைச்சர்களை விமர்சிக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. செப். 13, 2025 – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
2. செப். 20, 2025 – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
3. செப். 20, 2025 – திருவள்ளூர், வட சென்னை
4. அக்.4 மற்றும் அக்.5, 2025 – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
5. அக். 11, 2025 – கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
6. அக். 18, 2025 – காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
7. அக். 25, 2025 – தென்சென்னை, செங்கல்பட்டு
8. நவ.1, 2025 – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
9. நவ.8, 2025 – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
10. நவ.15, 2025 – தென்காசி, விருதுநகர்
11. நவ.22, 2025 – கடலூர்
12. நவ. 29, 2025 – சிவகங்கை, ராமநாதபுரம்
13. டிச.6, 2025 – தஞ்சை, புதுக்கோட்டை
14. டிச.13, 2025 – சேலம், நாமக்கல், கரூர்
15. டிச. 20, 2025 – திண்டுக்கல், தேனி, மதுரை

 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *