அரசாங்கத்தின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், ஹாரிஸ் ,தெளபீக் , பைசல் காசிம் ஆகியோர் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராக வாக்களித்துள்ளளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோர் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எதிராக வாக்களித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.