இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவி ஏற்கும் சாத்தியம்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் 16ஆவது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி பதவி விலகினார். இதையடுத்து, வெற்றிடமான அந்தப் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதன்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.இராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, இந்தியாவின் 17 ஆவது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தின் திருப்பூரில் 1957 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, பொன்னுசாமி இராதாகிருஷ்ணன் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்ற அவர், கல்லூரி காலத்தில், மேசைப் பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் ஓட்டப்பந்தயம் எனச் சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கியுள்ளார்.