நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் குருவாக பஷில் செயற்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான பகிரங்க விவாதம் இன்றைய தினம்(புதன்கிழமை) அரச தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்றது.
குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலுக்கு அமைவாகவே தற்போது நஸீர் அஹமட் தற்போது செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதே நஸீர் அஹமட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பணியெனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு இனங்களுக்கிடையிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நஸீர் அஹமட் தற்போது பேசுகின்றார் எனவும் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.