மட்டக்களப்பில் இனங்களிடையே ஐக்கியத்தினை கட்டியெழுப்பும் வகையிலான விசேட கலந்துரையாடல்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஐக்கியத்தினையும சமாதானத்தினையும்; சர்வமதத்தின் ஊடாக கட்டியெழுப்பும் வகையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் சிவில் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

சிவில் அமையத்தின் பணிப்பாளர் கண்டுமணி லவகுகராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் இஸ்ஸதீன்  சர்வமத குழு அமைப்பு

உறுப்பினர்களிடமிருந்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்க கலந்துரையாடலையும் என்னும் தலைப்பில் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

இதன்போது மாவட்டத்தில் இனங்களிடையே ஒன்றுபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்தாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிவில் அமையத்தின் திட்ட இணைப்பாளர் ஜெயராமன் கோபிநாத்,கள இணைப்பாளர் இராசு ரமேஸ்,ஸ்டான்லி அனுஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சர்வமத பிரதிநிதிகள்,கிராம மட்ட நல்லிணக்க செயற்பாட்டு குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.