யாழில் – போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது.
யாழ் குருநகர் பகுதியில் ஹெரோயின்...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதான நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.