சபாநாயகருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் – ஐ.ம.ச. எச்சரிக்கை.
எதிர்க்கட்சி தனது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்க்கட்சி தனது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்துமபண்டார எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக ஐ.ம.ச சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த முடிவை சபாநாயகர் முன்வைத்தபோது பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.