எம்.பி.க்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல – சபாநாயகர் கருத்து.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பாதகமான விடயம் அல்ல என்றும், அரசியல் மூலம் மக்களின் இறைமையை பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தலைமைத்துவம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஓல்கட் மண்டபத்தில் நான்காவது கூட்டத்தொடர் நடைபெற்ற போதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




