கொரோனா உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தும் – ஐ.நா.வின் அறிவிப்பு

0

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பொருளாதார இழப்பால், கச்சா எண்ணைய், தங்கம் உள்ளிட்ட ஏற்றுமதியில் முக்கியம்பெறும் வளர்ந்த நாடுகளின் அடுத்த 2 ஆண்டு வருமானத்தில் 2 முதல் 3 டிரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.