ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரிப்பு!

0

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அதி தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரத்து 700 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2 ஆயிரத்து 650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 முதல் 12 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.