மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி!

0

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.