LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

உயர் தர வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா.

September 12, 2025 · Tamil Ceylon LK

2024 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தில், பாராட்டும் நிகழ்வு, செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம் தெரிவு செய்து, 360 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் செலவிடப்படும் தொகை 36 மில்லியன் ரூபாவாகும்.

மேலும், கண்டி மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.

Related Stories

மேலும் ›