கெஹெல்பத்தர பத்மே வழக்கில் அதிர்ச்சி தகவல் – சம்பத் முக்கிய முகம் !

“கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின்...

Published September 12, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

“கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் சம்பத் மனம்பேரி செயல்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நிலத்தில் கைக்குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை பாதாள உலக குழுக்களுக்குச் சொந்தமானவை எனவும் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், சம்பத் மனம்பேரி யுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *