LATEST
கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!அமெரிக்க சுதந்திர தின உரையில் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!A/L மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!ஒரே நாளில் சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மாற்றம்!பல மாவட்டங்களில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சிடெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!அமெரிக்க சுதந்திர தின உரையில் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!A/L மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!ஒரே நாளில் சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மாற்றம்!பல மாவட்டங்களில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சிடெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!
உள்ளூர்

பல மாவட்டங்களில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி

July 5, 2026 · Tamil Ceylon LK

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளைப் பொறுத்தமட்டில், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

Related Stories

மேலும் ›