நேபாள சிறையில் தப்பிய கைதிகள் – இந்திய எல்லையில் கைது.
நேபாளத்தில் நிகழும் போராட்டம்...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாளத்தில் நிகழும் போராட்டம் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
நேபாளத்தின் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பியோடிச் சென்ற 67 கைதிகள் இந்திய – நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை இணைக்கும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளிலிருந்து அனைத்து கைதிகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.