LATEST
வாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடா? பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை!10 நாட்களில் 11,764 டெங்கு நோயாளிகள் – சுகாதாரத் துறையின் எச்சரிக்கைசிறைகளின் நெரிசலுக்கு தீர்வு – வீட்டுக் காவல் முறை அறிமுகமாகுமா?நீர்கொழும்பு சிறை கலவரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை“சிறைகளில் சுட்டுக் கொல்ல உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை” – நீதி அமைச்சர்பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை – மணிக்கு 50 கி.மீ வரை வீசலாம்பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுமா? நீதிமன்றம் ஒத்திவைப்புResolution of no confidence against the Minister of Justice! Actions of the oppositionவாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடா? பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை!10 நாட்களில் 11,764 டெங்கு நோயாளிகள் – சுகாதாரத் துறையின் எச்சரிக்கைசிறைகளின் நெரிசலுக்கு தீர்வு – வீட்டுக் காவல் முறை அறிமுகமாகுமா?நீர்கொழும்பு சிறை கலவரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை“சிறைகளில் சுட்டுக் கொல்ல உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை” – நீதி அமைச்சர்பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை – மணிக்கு 50 கி.மீ வரை வீசலாம்பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுமா? நீதிமன்றம் ஒத்திவைப்புResolution of no confidence against the Minister of Justice! Actions of the opposition
உள்ளூர்

பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை – மணிக்கு 50 கி.மீ வரை வீசலாம்

July 11, 2026 · Tamil Ceylon LK

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மாகாணத்திலும் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›