நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம் !
உலக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு விமர்சையாக ...
Published August 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இவ் பெருவிழாவின் 19ஆம் நாள் திருவிழாவான “சூர்யோற்சவ உற்சவம்” இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
இவ் “சூர்யோற்சவ உற்சவம்” பெரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு யாழ் கந்தனின் அருளை பெற்றார்கள்.
