LATEST
டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!
உள்ளூர்

சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!

August 24, 2026 · Tamil Ceylon LK

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›