730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம் – அரசுக்கெதிராக மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள் 

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக இன்றைய தினம் சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது .

Published September 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப்போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக இன்றைய தினம் சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது .

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை பார்க்காதே ! உரிமைக்காக குரல் கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன் , பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இ. சிறிநாத், இ. சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *