LATEST
நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!
உள்ளூர்

உத்தேச மின்சார கட்டணம் குறித்த பொது ஆலோசனை கோரப்படுகிறது

September 15, 2025 · Tamil Ceylon LK

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரவுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எதிர்வரும் 18 ஆம்திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை ஒன்பது மாகாணங்களில் வாய்மொழி ஆலோசனைகள் சேகரிக்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூல ஆலோசனை அமர்வுகள் திருகோணமலை, மொனராகலை, புத்தளம், கிளிநொச்சி, காலி, பொலன்னறுவை, கேகாலை, நுவரெலியா மற்றும் கொழும்பில் நடைபெற உள்ளன.

பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, வழங்கியுள்ள தொடர்பு எண்கள் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆவது மாடி இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், இல.28 புனித மைக்கல் வீதி கொழும்பு – 03 என்ற முகவரிக்கு அனுப்ப முடியும், அல்லது தொலைநகல் (011-2392641), WhatsApp (076-4271030) அல்லது மின்னஞ்சல் (info@pucsl.gov.lk) வழியாக அனுப்பலாம்.

இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவு மற்றும் அது தொடர்பான ஆலோசனை பத்திர அறிக்கைகளை www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Stories

மேலும் ›