எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கும் அரசு – சஜித் ஆதங்கம்.
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவதற்கு...
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவதற்கு பதிலாக, எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாய பிரச்சினைகளை ஆய்வு செய்ய சென்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
– இது குறித்து சஜித் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன,
மக்கள் பிரச்சினைகள் பேசப்படும் நேரத்தில் ஒலிவாங்கியை துண்டிப்பது வழக்கமாகியுள்ளது. ஒலிவாங்கிகளை துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடைமுறை ரீதியான பதில்களை பெற்றுக்கொடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் அரசியல் நாடகம் நடத்தவில்லை; மக்கள் சிக்கியுள்ள உண்மைப் பிரச்சினைகளை முன்வைத்து, தீர்வுகளை கோருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் பொய்யான கதைகளை பரப்பும் யுகத்திற்கு மாறி விட்டது. ஐக்கிய மக்கள் சக்தி உண்மையான தீர்வுகளை வழங்க விரும்புகிறது. என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.