நெடுந்தீவில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்.
நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில்...
நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.
நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது, ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடும் பணியை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.