கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
இரத்தினபுரி, பெல்மடுல்லை பகுதியில் உள்ள 67 பேர் இன்று தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் எதிர்வரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படவுள்ளனர்.
சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமையவே குறித்த 67 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.