ஆசியக் கிண்ணம்: சூப்பர் 4 சுற்றில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும்...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆசியக் கிண்ண தொடரில், நேற்றைய தினம் நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதற்கமைய, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. இந்த பரபரப்பான,விறுவிறுப்பான போட்டி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற இருக்கிறது.
குழு ஏ பிரிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
மேலும், இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை வெள்ளிக்கிழமை 19 ஓமனுடன் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.