செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – ஒக்டோபரில் நடவடிக்கை !

யாழ் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு...

Published September 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

யாழ் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் ஒக்டோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்காகன அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.

ஒக்டோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்டோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *