2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை கடந்த மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது