தடுப்பூசிகள், திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை

0

சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில், அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகத்திற்கும் மேலதிகமாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 350 சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் 250 அலுவலகங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித இடையூறும் இன்றி இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு, அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.