இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவருபவர்களை கௌரப்படுத்தும்விதமாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் விளக்குகள் ஒளிரவிடப்படவுள்ளன.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு கௌரவம் வழங்கும் முகமாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் விளக்குகள் இன்று மாலை 6.45 மணிக்கு ஒளிரவிடப்படுகின்றன.