இலங்கைக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலணியுடன் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.