இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து குறித்த 06 பேரும் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 254 பேரில் தற்போது 161 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் நாடாளுமழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் 103 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.