இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் புதிய வருடத்திற்க்கான முதல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (24.12) வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள் ,துறைசார் பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது வாலிபர் முன்னணியினால் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் உட்பட எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்குறித்தான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.