தேசிய விருது வென்ற : G.V பிரகாஷ் – M.S பாஸ்கர்.

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள்...

Published September 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடகர் போன்ற பல துறைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

“வாத்தி” திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை G.V பிரகாஷ் பெற்றார்.

அதே நேரம், பார்க்கிங் படத்தில் நடித்த M.S பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

இதன் மூலம் தமிழ் சினிமா மீண்டும் ஒரு முறை தேசிய அந்தஸ்த்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *