ஆர்ட்டெமிஸ் II – சந்திரனில் தரையிறங்கும் நாசா.
நாசா 2026 பெப்ரவரி தொடக்கத்தில், 50 ஆண்டுகளுக்குப்...
நாசா 2026 பெப்ரவரி தொடக்கத்தில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனைச் சுற்றி பத்து நாள் பயணத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா நம்புவதாகக் கூறியுள்ளது.
– இது குறித்து நாசா செயல் துணை உதவி நிர்வாகி லக்கீஷா ஹாக்கின்ஸ் தெரிவிக்கையில்,

மனித விண்வெளி ஆய்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆர்ட்டெமிஸ் II என்று அழைக்கப்படும் இந்தப் பயணத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள், பத்து நாள் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்புவார்கள்.
இந்த முயற்சியானது, சந்திரனில் தரையிறங்குவதற்காக ராக்கெட் மற்றும் விண்கல அமைப்புகளை சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பணியின் வெற்றி, நாசா எவ்வளவு விரைவில் ஆர்ட்டெமிஸ் III விண்கலத்தை சந்திரனில் தரையிறக்க ஏவ முடியும் என்பதை தீர்மானிக்கும்.
ஆனால் இந்த பணி முழுமையடைந்தாலும், ஆர்ட்டெமிஸ் III ஐ 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் செலுத்த முடியாது என்றும் நாசா செயல் துணை உதவி நிர்வாகி லக்கீஷா ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.