கழிவறை விவகாரம் சபையில் சூடான அர்ச்சுனா.
சபையில் இன்று (25) ராமநாதன் அர்ச்சுனா ஒழுங்கு பிரச்சினையையாக
சபையில் இன்று (25) ராமநாதன் அர்ச்சுனா ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்
– தொடர்ந்து ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில்,
“பாராளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் கூறுகிறார்கள். ஏன் என்று நாம் கேள்வி கேட்டால் அதற்க்கு கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்
இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது . எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்,” என்று அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் இக் கருத்தானது சபையில் உறுப்பினர்களிடையில் நகைப்பை ஏற்படுத்தியது.