உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு சஜித் அஞ்சலி

குருணாகல், மெல்சிரிபுர பகுதியில் கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு

Published September 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

குருணாகல், மெல்சிரிபுர பகுதியில் கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அண்மையில், நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர். இதில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகள் அடங்குவதுடன் சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இப்பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 

இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், விபத்து குறித்து மேலும் அறிந்து கொள்ள, ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய தலைமை தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *