ஜப்பான் பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இரு நாடுகளின் பொருளாதாரம், முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும்.
இந்தக் கலந்துரையாடல்களில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், டாக்டர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.