மிஹிந்தலையில் பேருந்துடன் லொறி மோதி விபத்து.
மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் கதிர்காமத்திலிருந்து...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்துள்ளது.