ஆசிரியர் – அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்த நடவடிக்கை: பிரதமர் கருத்து.

நாட்டில் காணப்படும் ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை...

Published September 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாட்டில் காணப்படும் ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்தும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

– பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்,

இடமாற்றங்களை நிராகரிப்பது, நீண்ட காலமாக கல்வித் துறையில் நிலவும் பிரச்சினையாக இருக்கின்றதுடன், இது இடமாற்றங்களுக்கு இணங்காத ஒரே துறையாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இயலாமையுடைய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறித்து ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டு முறையின் கீழ், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து துறைகளிலும் அனுமதி வழங்கப்படும் எனவும், தகுதி அடிப்படையிலான மாவட்ட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உபகுழுக்களின் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி தொடர்பான மாவட்ட பிரச்சினைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *