LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உள்ளூர்

சிறுவர்கள் மற்றும் முதியோருக்கான பாதுகாப்பிற்கு அரசு உறுதி !

October 1, 2025 · Tamil Ceylon LK

இன்று (2025 அக்டோபர் 01) உலக சிறுவர்கள் தினத்தையும் உலக முதியோர் தினத்தையும் முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்,

சிறுவர்களின் மற்றும் முதியோரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளின் உடல் — உள நலம், கல்வி சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகள் கொண்டுள்ள முன்னிறுத்தல்கள் அரசு நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், ஒட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளமையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” என்ற தொனிப்பொருளுடன் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செய்திக்கூட்டத்தில், “சிறுவர்களின் மகிழ்ச்சியான புன்னகை நமது தேசத்தின் நம்பிக்கையும் பலமும்” என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கு முதியோர்கள் செய்த பங்களிப்பிற்கு மரியாதையும் நன்றியுமானும் தெரிவித்தார்.

மேலும், சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பும் மரியாதையும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் ! என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›