முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி !

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில்...

Published October 1, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி – இலங்கை மகளிர் அணி மோதின. இப் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி, போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, இந்திய அணி 47 ஓவர்களில் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

> துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பில்,

– டீப்தி ஷர்மா 53 ஓட்டங்களையும் மற்றும் அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

> இலங்கை மகளிர் அணி பந்து வீச்சில்,

– இனோகா ரணவீர 4 விக்கெட்டுக்களையும் மற்றும் உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, டக்வோர்த் லூயிஸ் முறைபடி, இலங்கை அணிக்கு 271 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

> துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில்,

– அணித் தலைவர் சமரி அதபத்து மாத்திரமே அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

– இந்திய அணி பந்து வீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *