பொலிஸார் துப்பாக்கிச் சூடு – மூவர் கைது !
நிட்டம்புவ - கட்டுநாயக்க வீதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற...
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நிட்டம்புவ – கட்டுநாயக்க வீதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது, கம்பஹா பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ரி-56 துப்பாக்கியால் சக்கரங்களைச் சுட்டு, வேனை நிறுத்தியபின், அதில் இருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சாரதி லெல்லொபிட்டிவைச் சேர்ந்தவர், மற்ற இருவர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.