காஷ்மீரில் பாரிய போராட்டம்.
காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக...
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் எழுந்துள்ளது.
இதனால் அங்குள்ள உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.