த.வெ.க பிரச்சாரங்கள் ஒத்திவைப்பு.

த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது...

Published October 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கடந்த சனிக்கிழமை கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

– இது குறித்து த.வெ.க. தலைமை செயலகம் அறிவிப்பில்,

நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

என தமிழக வெற்றிக் கழகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *