சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்த்த சிறுவர்கள்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து தீபம் ஏற்றி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிகழ்வு நேற்று புதன்கிழமை (1) மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நடைபெற்றது.
இதன்போது அதே இடத்தில் சிறுவர்கள் ஒன்று கூடி சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறு ஊர்வலத்துடன் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து கரி நாளாக அனுஷ்டித்து தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன் போது கடந்த காலங்களில் காணாமல் சென்ற சிறுவர்களின் நிலைமை குறித்த பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ்வாறு குறித்த போராட்டத்தில் சிறுவர்கள் இணைந்து கொண்டனர்.
கிழக்கின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவர்கள் திருகோணமலை மாவட்டத் தலைவர் செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் அமல்ராஜ் அமலநாயகி, மற்றும் அம்பாறை மாவட்டத் தலைவர் தம்பிராசா செல்வராணி ஆகியோர், அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் மற்ற உறவுகளுடன் இணைந்து, தம்பிலுவில் நடைபெற்ற நீதிக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
